Wednesday, December 25, 2024
HomeLatest Newsபேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும்! வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும்! வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் ஒரு லீட்டர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டதன் பயனை பயணிகளான மக்களுக்கு வழங்குதற்காக பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிரேண்டா தெரிவித்துள்ளார்.

குறைக்கப்படும் பேருந்து கட்டணங்களின் விதம் தொடர்பில் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Recent News