யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்குச் செல்லும் படகு பயணக் கட்டணச் சீட்டில் நயினாதீவு என்ற தமிழ்ப்பெயர் நீக்கப்பட்டு நாகதீபய என்ற சொற்பதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நயினா தீவில் நயினை நாகபூசணியம்மன் ஆலயமும் நாக விகாரையும் அமைந்துள்ளது இவ்விரு இடங்களுக்கும் கடல் வழிப் போக்குவரத்தையே மேற்கொள்ள முடிவதால் இரண்டு இன பக்தர்களும குறிகட்டுவான் – நயினாதீவு கடல்வழிப் பாதையையே உபயோகித்து வருகின்றனர்.
இதேவேளை அண்மிய காலப்பகுதியில் தமிழர்களுக்கெதிராக தொல்லியற் திணைக்களம் பல்வேறுபட்ட திட்டமிட்ட அழிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் இவளவு காலமும் நயினாதீவு என்ற பாவனையிலிருந்த சொற்பதம் நாகதீபய என மாற்றப்பட்டுள்ளமை பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்களுக்குட்படுதப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் தமிழர்கள் பகுதியில் தொடர்ச்சியாக சிங்களவரின் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் நடைீபற்று வருகையில் இது தொடர்பாக தமிழ் அமைச்சர்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய கவனமெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்