Friday, January 24, 2025
HomeLatest Newsமுன்னணி ஆண்கள் பாடசாலை அருகில் விபச்சார விடுதி; சிக்கிய யுவதிகள்!

முன்னணி ஆண்கள் பாடசாலை அருகில் விபச்சார விடுதி; சிக்கிய யுவதிகள்!

கண்டி பேராதனை வீதியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதி நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

காவல்துறையினர் இதனை சுற்றிவளைத்ததோடு விசேட மூன்று இளம் பெண்களையும் அதன் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் கண்டி பேராதனை வீதியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் விசேட உத்தரவின் பேரில் மாத்தளை நகருக்கு வந்த காவல்துறையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் குறித்த இடத்தில் மசாஜ் நிலையம் நடத்துவதற்கு அனுமதிப்பத்திரம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பிரதம காவல்துறை பரிசோதகர் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் உத்தியோகத்தர் உள்ளிட்ட காவல்துறை குழுவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட யுவதிகள் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் குருநாகல், அநுராதபுரம் முதலான பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recent News