Tuesday, December 24, 2024
HomeLatest Newsகொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களிடம் பிரிட்டன் பிரதமா் மன்னிப்பு.

கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களிடம் பிரிட்டன் பிரதமா் மன்னிப்பு.

கொரோனா பேரிடா் காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை அப்போதைய பிரதமா் போரீஸ் ஜான்சன் எடுத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தாா்.

கொரோனோ பரவலைக் கட்டுப்படுத்த போரீஸ் ஜான்சன் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்தாா். மேலும் கரோனா பேரிடா் காலத்தில் அரசு எடுத்த கடுமையான முடிவுகளால் பாதிக்கப்பட்டவா்களிடமும் கொரோனாவால் சொந்தங்களை இழந்த குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொண்டுள்ளோம். அது வருங்காலத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் என்று ரிஷி சுனக் தெரிவித்தாா்.

Recent News