Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகாரத்துறை செயலர் !!!

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகாரத்துறை செயலர் !!!

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகாரத்துறை செயலர் டேவிட் கெமரூன், இதன் காரணமாக இரட்டை தோல்வியை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் ஈரானின் உண்மைத்தன்மை வெளியுலகிற்கு தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கில் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டு வருவதன் மூலமே காசா மக்களுக்கான உணவு பொருட்களை அனுப்ப முடியும்.தற்போதைய நிலையில் இந்த விடயம் குறித்தே பிரித்தானியா அதிக கவனம் செலுத்துவதாகவும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை செயலர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், காசாவின் சில பகுதிகளில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.இந்த அபாய நிலையில் இருந்து மீள இஸ்ரேல் போதியளவு உணவு பொருட்களை பிராந்தியத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேலும் ஈரானும் நிதானமாக செயல்பட வேண்டும் என ரஷ்யாவும் சீனாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஈரானின் தாக்குதல் குறித்து விமர்சிக்காமல் இருந்து வந்த ரஷ்யா, தற்போது பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என கோரியுள்ளது. பதற்றத்தை தீர்க்கும் நோக்கில் இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.

Recent News