காசாவில் “இனப்படுகொலையை” முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கியூபாவின் ஜனாதிபதி சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.”இனப்படுகொலை இப்போது நிறுத்தப்பட வேண்டும் என்று கியூபா கோருகிறது.”என தலைநகர் ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்டி நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்
“இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் மனிதநேயமற்ற செயற்பாடுகளால் பாலஸ்தீனிய நிலம் தொடர்ந்து உயிர்த்தியாகம் செய்து வருகிறது. இரத்தம் கசிந்து, அதன் அஸ்திவாரங்களுக்கு அழிக்கப்படும் வரை, குற்றத்தை பார்துகொண்டிருக்காமல் இஸ்ரேலினை விரைவாக கண்டிக்க சர்வதேச சமூகத்தை அழைப்பதில் நாங்கள் பின்வாங்க கூடாது ” என்று டயஸ்-கேனல் எக்ஸ் தளத்தில் மேலும் கூறினார்
கரீபியன் தீவு தேசத்தின் ஜனாதிபதி காஸா மீது இஸ்ரேலின் பல மாத கால தாக்குதலுக்கு வலுவான எதிர்ப்பைக் குரல் கொடுக்கும் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார் மேலும் பாலஸ்தீனத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் .