Thursday, January 23, 2025
HomeLatest Newsகுறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளிற்கு சுவாசிக்கும் கருவி..!நபர் அசத்தல்..!

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளிற்கு சுவாசிக்கும் கருவி..!நபர் அசத்தல்..!

தான்சானியாவில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 26 சதவீதமான குழந்தைகள் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதாக அந் நாட்டு சுகாதாரத்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதனால், இந்த குழந்தைகள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வகையில் வில்சன் என்பவர் 2018 ஆம் ஆண்டு ஒரு கருவியை உருவாக்கினார்.

இது தொடர்பில் வில்சன் தெரிவிக்கையில் ,இந்தக் கருவியை வடிவமைக்க ஒரு ஒட்சிசன் சிலிண்டர் போதுமானதாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த கருவியின் மூலம் ஆன்னா ஜானா ஹெய்ரா, என்பவருடைய குழந்தையே முதன் முதலாகக் காப்பாற்றப்பட்டுள்ளது.

தன் குழந்தையின் மூச்சுத்திறன் மிக குறைவாகக் காணப்பட்டதால் காப்பாற்றுவது மிகக் கடினமென வைத்தியர்கள் கைவிரித்த நிலையில் இக் கருவியின் உதவியுடன் குழந்தையைக் காப்பாற்றியதாக அந்த குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.

தனது அண்ணாவின் குழந்தை வெறும் அரை கிலோ நிறையுடையதாக இருந்ததாகவும் இக் கருவி மூலம் காப்பாற்றப்பட்டு தற்போது நான்கு வயதகை் கடந்தும் வாழ்ந்து வருவதாகவும் இக் கருவியின் கண்டுபிடிப்பாளர் கூறியுள்ளார்.

ஏனைய சுவாசக் கருவிகள் 5000 டொலர்கள் வரை காணப்படினும் வில்சனின் கருவி வெறும் 30 டொலர்களில் உருவாக்க முடியும் எனவும், இதன் இயக்கத்திற்கு மின்சாரம் தேவையில்லை என்பதால் கிராமங்களுட்பட அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியானது, தற்போது வைத்தியசாலைகளில் குழந்தைகளின் இறப்பவீதத்தை குறைத்துள்ளதுடன் வில்சனுக்கு சர்வதேச ரீதியாக செவிலியர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கான அங்கீகார வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

அத்துடன், ஏனைய செவிலியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இவர் எழுதிய நூலும் தன்சானியாவில் செவிலியர்களுக்காக எழுதப்பட்ட முதல் நூல் என்ற தடத்தையும் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News