Wednesday, January 22, 2025
HomeLatest Newsமூளையில் ரத்தக் கசிவு - பிரபல இளம் நடிகை மரணம்

மூளையில் ரத்தக் கசிவு – பிரபல இளம் நடிகை மரணம்

பிரபல மேற்கு வங்க நடிகைகளில் ஒருவர் அந்த்ரிலா ஷர்மா. இவர் ‘ஜுமுர்’என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். அந்தவகையில் பெங்காலி தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முகங்களில் அந்த்ரிலாவும் ஒருவர்.முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவரான நடிகை அந்த்ரிலா ஷர்மாவுக்கு இதற்கு முன்னரும் ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக குணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் பிரகாரம் அவருக்கு மூளையின் இடது பக்கம் ரத்தக்கசிவு இருப்பதைக் கண்டறிந்தார்கள். அதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர், தொற்று நோய் நிபுணர், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் மற்றும் புற்று நோய் கதிர்வீச்சு நிபுணர் ஆகியோர் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவந்தனர்.

மருத்துவர்கள் பலரும் ஒன்றிணைந்து அந்த்ரிலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து கவலைக்கிடமாகவே அவரின் உடல் இருந்து வந்த நிலையில் நினைவு திரும்பாமலே நேற்றிரவு யாருமே எதிர்பாராத வகையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அந்த்ரிலா ஷர்மாவின் மறைவு அவரது ரசிகர்களை படு சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் பலரும் அவரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Recent News