Tuesday, December 24, 2024
HomeLatest Newsகலை இலக்கியப் பேரவையால் மல்லாகத்தில் புத்தக அரங்கவிழா!

கலை இலக்கியப் பேரவையால் மல்லாகத்தில் புத்தக அரங்கவிழா!

தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் ‘நூறு மலர்கள் மலரட்டும் ‘ என்ற தலைப்பிலான புத்தக அரங்க விழா நாளை 24 ஆம், 25 ஆம் . 26 ஆம் திகதிகளில் மல்லாகம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

எழுத்தாளரும் பதிப்பாளரும் நடு இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் நினைவாக இடம்பெறும் இந்த அரங்க விழாவுக்கு தாயகம் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியரும் ‘எங்கட புத்தகங்கள்’ சஞ்சிகையின் இணை ஆசிரியரும் ஆய்வாளருமான ச.சத்தியதேவன் தலைமை தாங்கவுள்ளார் .

இதன்போது ஈழத்து நூல்களின் அறிமுகம், நாடக ஆற்றுகைகள், இலக்கியக் கலந்துரையாடல் மற்றும் புத்தகக் கண்காட்சி மலிவு விற்பனை ஆகியவை இடம்பெறவுள்ளன.

இந்த அரங்க விழாவில் நூல்களின் அறிமுக உரைகளை எழுத்தாளர் சோ.தேவராஜா, ஆசி ரிய ஆலோசகரும், எழுத்தாளருமான க.சிவகரன் ஆசிரியரும், எழுத்தாளருமான ஸ்ரீலேகா பேரின்பகுமார், உளவளத் துணையாளரும் சமூக செயற்பாட்டாளருமான செ.திலீபன், கலாசார உத்தி யோகத்தர் ச.தனுஜன் ஆகியோர் ஆற்றவுள்ளனர் .

இந்த நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

Recent News