Tuesday, December 24, 2024
HomeLatest Newsசீனாவில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவிக்கப்பட்டுள்ள உடல்கள்!

சீனாவில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவிக்கப்பட்டுள்ள உடல்கள்!

சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குளிர்கால சூழலில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. நாளாந்தம் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீனாவில், வெளிப்படை தன்மை குறைவாகவும், அந்நாட்டு செய்திகள் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவரும் சூழலும் காணப்படுகிறது.

சீனாவில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவிக்கப்பட்டுள்ள உடல்கள்! திடுக்கிடும் காணொளி

இந்த நிலையில், சீனாவில் கொரோனாவுக்கு பலியான உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவித்து வைத்த காணொளி வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பத்திரிகையாளரான ஜெனிபர் ஜெங் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், மேற்குறிப்பிட்ட அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.

அதில், மருத்துவமனையின் தரையில் பெருமளவிலான உடல்கள் கிடைமட்டத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

கொரோனா அலையின் தீவிர பரவலை அந்நாட்டு அதிகாரிகள் வெளிப்படுத்த முன்வராமல், நிலைமை கட்டுக்குள் உள்ளது என கூறி மறைக்கும் சூழலில், சமூக ஊடகத்தில் இதுபோன்ற அதிர்ச்சியான காணொளி வெளிவந்து சீனாவை பற்றி உலகிற்கு தெரிய செய்து வருகிறது.

Recent News