Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி !!!

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி !!!

ஆப்கானிஸ்தானில் படகொன்று நீரில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட சுமார் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் இன்று சனிக்கிழமை (01.06) இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்தப் படகில் 25 பேர் பயணித்த நிலையில் ஐவர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஐவரின் சடலங்கள் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.பாலம் இன்மையால் கிராமங்கள் மற்றும் உள்ளூர் வியாபார நிலையங்களுக்கிடையே பயணிக்க அப்பகுதி மக்கள் படகை பயன்படுத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மை காலமாக ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News