Monday, December 23, 2024
HomeLatest NewsWorld Newsஇந்தியாவில் படகு கவிழ்ந்து விபத்து; சிறுவர்கள் உட்பட பலர் மாயம்..!மீட்புப் பணிகள் தீவிரம்..!

இந்தியாவில் படகு கவிழ்ந்து விபத்து; சிறுவர்கள் உட்பட பலர் மாயம்..!மீட்புப் பணிகள் தீவிரம்..!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கந்தர்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகில் சிறார்களும் உள்ளூர்வாசிகளும் கந்தர்பாலிலிருந்து பத்வாரா வரை பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம் உள்ளிட்ட பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News