Tuesday, January 14, 2025
HomeLatest Newsஇலங்கையில் பிளேட் மனிதன்

இலங்கையில் பிளேட் மனிதன்

மூன்று கொள்ளையர்கள் தன்னைத் தாக்கி 1.86000 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பொலிஸில் பொய் முறைப்பாடு செய்த நிலையில், அன்றே முறைப்பாடு செய்த நபர் கைது செய்யப்பட்டதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர்.

அலைஹால, ஹினிதும பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளையர்களை காயப்படுத்தி இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் தான் இருந்ததைப் போன்று காட்டுவதற்காக , வயிறு மற்றும் தோள்களை பிளேடால் வெட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கர்ப்பிணியான தனது சகோதரியை ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொள்வதற்காக  முச்சக்கரவண்டியில் தவலமவில் அமைந்துள்ள ராஜ்ய வங்கிக்கு வந்துள்ளார்.

அவரது சகோதரி வங்கியில் இருந்து பணத்தை கொடுத்துள்ளார். சகோதரியை பேருந்தில் ஏற்றி விட்டு சந்தேக நபர் புறப்படுள்ளார்.

பின்னர் தாம் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது மூன்று கொள்ளையர்கள் தம்மை தாக்கி 1.86000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் வாக்குமூலம் பெற காவல்துறைக்கு வருமாறு கூறப்பட்டது.

அவரது வயிறு மற்றும் தோள்பட்டையின் இருபுறமும் உள்ள காயங்கள் சுயமாக ஏற்படுத்தியதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சந்தேகநபரின் மேலதிக வாக்குமூலத்தில் பொலிஸில் பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தோள் மற்றும் வயிற்றை வெட்டிய பிளேடும்  காணப்பட்டது. திருடப்பட்டதாக கூறப்படும் பணமும் அவரிடமிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Recent News