Friday, January 24, 2025
HomeLatest Newsஆட்டுக்குட்டிக்கு பிறந்த நாளுக்கு பார்ட்டி கொண்டாட்டம் ;வைரலாகும் புகைப்படம்

ஆட்டுக்குட்டிக்கு பிறந்த நாளுக்கு பார்ட்டி கொண்டாட்டம் ;வைரலாகும் புகைப்படம்

தங்களது வீட்டிலிருக்கும் ஆடு, குட்டி ஈன்றதுக்காக நபரொருவர் பார்ட்டி கொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வைரலாகி வருகிறது.

ஆட்டிக்குட்டியின் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாட்டம்

உத்திரபிரதேச மாநிலத்தின் பண்டா எனும் பகுதியில் வசிக்கும் நபரொருவர் தன்னுடைய வீட்டிலிருக்கும் ஆட்டுக்குட்டி நீண்ட காலத்திற்கு பிறகு குட்டி ஈன்றெடுத்துள்ளதால் கிராமத்திலுள்ள மக்களை அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார்.

பொதுவாக கிராமபுறங்களில் இது போன்று விசேஷங்கள் நடப்பது வழமை. ஆனால் சற்று வளர்ச்சியடைந்த கிராமத்தில் இந்நிகழ்வு முதன்முறையாக நடந்துள்ளது.

மேலும் இந்த பார்ட்டியில் கலந்துக் கொண்ட மக்களுக்கு வயிறாரஉணவு அளித்துள்ளார் . பின்னர் ஆட்டிக்குட்டியை தன்னுடைய வண்டியில் வைத்து சுற்றுபயணம் கூட்டிச் சென்று வீடு திரும்பியதாக பார்ட்டியில் கலந்துக் கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recent News