Thursday, January 23, 2025
HomeLatest Newsதிரெட்ஸ் செயலியில் அதிரடியாக இணைந்த பில் கேட்ஸ்..!பாராட்டிய மார்க் ஜூக்கர்பர்க்..!

திரெட்ஸ் செயலியில் அதிரடியாக இணைந்த பில் கேட்ஸ்..!பாராட்டிய மார்க் ஜூக்கர்பர்க்..!

திரெட்ஸ் செயலி புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அதில் இணைந்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் என்ற புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளார்.

இந்த செயலியில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்த வண்ணமுள்ளனர்.

அந்த வகையில், தோற்றத்திலும், பயன்பாடு விடயத்திலும் டுவிட்டரை ஒத்ததாக இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திரெட்ஸ் அறிமுகமாகிய 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்ததுள்ளமை பெரிய சாதனையாக கருதப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலே, திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்சும் அதில் இணைந்துள்ளார்.

அதையடுத்து பில் கேட்ஸ், திரெட்ஸ் செயலியில் இணைந்ததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பில் கேட்சின் அந்த பதிவிற்கு ரியாக்ட் செய்துள்ள மார்க் ஜூக்கர்பர்க், ஆப்பில் இணைந்தது நல்ல முயற்சி என்று பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News