Monday, December 23, 2024
HomeLatest Newsகடும் சண்டையில் பிக்பாஸ் வீடு! வெளியானது பரபரப்பான ப்ரோமோ

கடும் சண்டையில் பிக்பாஸ் வீடு! வெளியானது பரபரப்பான ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கினால் அனைத்து போட்டியாளர்களிடையே மோதல் வெடித்துள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 22 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.

இன்று பிக்பாஸ் தங்களது இடத்தினை தெரிவு செய்ய ஒன்று முதல் பத்து வரையான இடங்களை கொடுத்துள்ளார். இதில் போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்திக் கொள்ள சரியான மோதல் ஏற்பட்டுள்ளது.

ஏடிகே ஷிவின் இடையே கடுமையான வாக்குவாதம் அரங்கேற மற்றொரு புறம், அசீம் விக்ரமன் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Recent News