Saturday, January 25, 2025
HomeLatest Newsபிக்பாஸ் தனலட்சுமியின் குடும்ப பின்னணி! வெளிவந்த ரகசிய தகவல்கள்

பிக்பாஸ் தனலட்சுமியின் குடும்ப பின்னணி! வெளிவந்த ரகசிய தகவல்கள்

பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தனலட்சுமி பற்றி நீங்கள் அறிந்திராத புதிய தகவல்கள்.பிக்பாஸ் வீட்டில் 21 போட்டியாளர்களில் இவரும் ஒருவராக கலந்துக் கொண்டு இன்றுவரையும் விளையாடிக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் பவானி பகுதியில் பிறந்து வளர்ந்தவர்தான் தனலட்சுமி. அம்மா, அப்பா, தம்பி, தனலட்சுமி என சிறிய குடும்பம். இவருக்கு 21 வயதாகிறது.

எப்போதும் தனது அம்மா பற்றி மாத்திரம் பேசிக்கொண்டிருப்பார். இவரது அப்பாவும் அம்மாவும் 16 வயதில் திருமணம் செய்து கொண்டவர்கள். இதனால் குடும்பம் மீது அதீத அக்கறை கொள்ளவில்லை.

இவரின் அம்மா தான் தனலட்சுமியும் அவரது தம்பியையும் வளர்த்து வந்துள்ளார். இவருக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பதற்கும் நடனம் ஆடுவதற்கும் ஆர்வம் அதிகம் கொண்டவர்.

இந்நிலையில் டிக்டாக் செயலி மூலம் மக்களுக்கு பரீட்சயமானவர். சமூக வலைத்தளங்களில் காஞ்சனா, அருந்ததி மற்றும் பல கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

பிக்பாஸ் சீசன் 06 பிக்பாஸ் வீட்டில் சுறுசுறுப்பாகவும் துடிப்பாகவும் விளையாடி வருகிறார்.

இவர் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ‘என்னை வெளியே அனுப்புங்க’, ‘நான் வீட்டுக்கு போறேன்’ என்று அவ்வப்போது கூறி வந்தார்.தனலட்சுமியின் இந்த செயலுக்கு ஏற்கெனவே கமலும், பிக் பாஸும் அறிவுரை வழங்கியிருந்தனர்.

இந்த வீட்டில் தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போட்டியில் தனலட்சுமி இறுதிகட்டம் வருவரா என்று காத்திருத்து தான் பார்க்க வேண்டும்

Recent News