Monday, December 23, 2024
HomeLatest Newsபாகுபலி திரைப்படத்தினை போன்று தெறிக்கவிடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!....வெளியானது ப்ரோமோ

பாகுபலி திரைப்படத்தினை போன்று தெறிக்கவிடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!….வெளியானது ப்ரோமோ

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டாஸ்க்கில் ராபர்ட் ரச்சிதா இருவரும் ராஜா ராணியாக மாறியுள்ளனர்.பாகுபலி திரைப்படத்தினை கண்முன் நிறுத்துவது போல் அமைந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கில் வீடு அரண்மனையாக மாறியுள்ளது. அரச குடும்பத்தின் நபர்களாக இருப்பதற்கு பலரும் போட்டி போட்ட நிலையில் இறுதியில் ராபர்ட், ரச்சிதா, ஜனனி, விக்ரமன் இவர்கள் ராஜா, ராணி, இளவரசர், இளவரசி என மாறியுள்ளனர்.

ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா இருவருக்கும் இடையே ஒரு கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருக்கும் போது பிக்பாஸும் குறித்த டாஸ்கில் கோர்த்து விட்டுள்ளார்.

ராணி வேடத்தில் கம்பீரமாக ரச்சிதாவும், ராஜா வேடத்தில் ராபர்ட் மாஸ்டரும் வீட்டில் உலா வருகின்றனர்.

இதில் படைத்தளபதியாக அசீம் செயல்பட்டு வரும் நிலையில், அவரின் நடிப்பினைக் கண்டால் பாகுபலி படத்தினை கண்முன் நிறுத்துவதாகவே அமைந்துள்ளது.

Recent News