Wednesday, December 25, 2024
HomeLatest Newsபணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! அம்பலமாகிய உண்மை

பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! அம்பலமாகிய உண்மை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் சிலர் பணம் கொடுத்து ஓட்டு பெற்று வருவதாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பின்பு சில போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் வெளியே சென்றுவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள மூன்று போட்டியாளர்கள் தான் பணம் கொடுத்து ஓட்டுகளை பெற்று வருவதாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சையில், ஜனனி, ராம், தனலட்சுமி என மூன்று போட்டியாளர்கள் சிக்கியுள்ளனர். தனலட்சுமி, ராம் மற்றும் ஜனனி ஆகியோர் சிக்கி உள்ளனர்.இவர்களில் பிரபல கிரிக்கெட் வீரரான ராம் இரண்டு லட்சம் ரூபாயும், தனலட்சுமி ஐந்து லட்சம் ரூபாயும், ஜனனி ஒரு லட்சம் ரூபாயும் செலவு செய்து ஓட்டுக்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என்று கண்ணீர்விட்ட தனலட்சுமி தற்போது 5 லட்சம் கொடுத்து ஓட்டு வாங்குவது எப்படி என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Recent News