Thursday, January 23, 2025
HomeLatest Newsநிலவில் பெரிய எரிமலை கிரானைட் பாறை கண்டுபிடிப்பு..!விஞ்ஞானிகள் அசத்தல்..!

நிலவில் பெரிய எரிமலை கிரானைட் பாறை கண்டுபிடிப்பு..!விஞ்ஞானிகள் அசத்தல்..!

நிலவில் புதைந்துள்ள 50 கிலோ மீட்டர் விட்டம் பெரிய எரிமலை கிரானைட் பாறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

அந்த வகையில், மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வெளியான தீக்குழம்புகள் குளிர்ச்சியடைந்து இந்த பாறை உருவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது அதிலிருந்து வெப்பம் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அத்துடன்,இந்த கிரானைட் பாறை நிலவின் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்திரனின் மேற்பரப்பில் உள்ள ஏனைய பாறைகளுடன் ஒப்பிடுகையில், கிரானைட் பாறையில் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் செறிவு அதிகம் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News