உக்ரேன் மீதான படையெடுப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் காரணமாக ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா 500க்கும் மேற்பட்ட புதிய தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் ஐ ஆக்கிரமித்து சுமார் 2 வருடகாலம் முடவடைந்து தற்போது மூன்றாவது ஆண்டிற்கு போர் தடம்பதித்துள்ளது .
உக்ரைனிற்கு ஆதரவளிப்பதற்காகவும், மொஸ்கோவின் எரிசக்தி வருவாயை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்காகவும் சுமார் 100 நிறுவனங்களுக்கு வொஷிங்டன் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதில் ரஷ்யாவின் பிரதான மிர் கட்டண முறை, நிதி மற்றும் இராணுவ நிறுவனங்கள் மற்றும் நவல்னியின் சிறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அடங்கும்.
மேலும் சான் பிரான்சிஸ்கோவில் வியாழன் அன்று நவல்னியின் மனைவி மற்றும் மகளை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி தான் காரணம் என்பதில் “சந்தேகமே இல்லை” என்று கூறியுள்ளார்.
உலகப் பொருளாதாரத்தில் இருந்து ரஷ்யாவைத் துண்டிக்கும் முயற்சிகளில் வொஷிங்டன் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறது.
எனினும், ரஷ்யாவின் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட $2.2-டிரில்லியன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட நல்ல நிலையில் இருந்து வருவதால் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என பன்னாட்டு ஊடக ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளன.