Tuesday, December 24, 2024
HomeLatest Newsவெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரம்..! எது தெரியுமா?

வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரம்..! எது தெரியுமா?

சுவிட்சர்லாந்திலேயே வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரமாக பேசல் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த மற்றும் மோசமான நகரங்களை வரிசைப்படுத்தும் சர்வதேச தரவரிசைப்படுத்தல் ஒன்றில், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் சிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற பட்டியல்களில் சூரிச் அல்லது ஜெனீவா போன்ற நகரங்கள்தான் முக்கிய இடம்பிடிக்கும். ஆனால், இம்முறை அவற்றை பின்னுக்குத் தள்ளி பேசல் இம்முறை முன்னேறியுள்ளது.

InterNations என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரங்கள் குறித்த கருத்துக்களும் அனுபவங்களும் கேட்கப்பட்டன.

அவ்வகையில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உலகிலுள்ள 50 நகரங்களில், முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே சுவிஸ் நகரம் பேசல்தான்.

பேசல் பட்டியலில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில், சூரிச் 20ஆவது இடத்தையும்,ஜெனீவா 34ஆவது இடத்தையும்தான் பிடிக்க முடிந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற, பேசல் நகரில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் நிதி நிலைமை திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். சொல்லப்போனால், நிதி நிலைமை விடயத்தில் உலகிலேயே பேசல் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

எளிதாக வங்கிக் கணக்கு துவங்குவது, வீட்டில் அதிவேக இன்டர்னெட் ஆகிய விடயங்களும் திருப்திகரமாக இருப்பதாக பேசல் வாழ் வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேற்குறிப்பிட்ட விடயங்கள் மட்டுமின்றி, வாழ்க்கைத்தரத்திலும் அதிக புள்ளிகள் பெற்றுள்ளது பேசல்.

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை விடயங்களில், உலகிலேயே இரண்டாவது இடம், பாதுகாப்பில் உலகிலேயே நான்காவது இடம் என பல விடயங்கள் பேசல் நகரத்தின் பெருமைக்கு காரணமாக உள்ளன.

இவைபோக, நகரச் சூழல், காற்றின் தரம், பாதுகாப்பு, பொதுப்போக்குவரத்து, ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவற்றில் முதலிடம், வேலை வாய்ப்புகள், என இத்தனை விடயங்கள் வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரம் என்ற பெருமையை பேசல் நகரத்துக்கு பெற்றுத்தர காரணமாக அமைந்துள்ளன.

இத்தனை நல்ல விடயங்கள் இருந்தாலும், சில குறைகளும் பேசல் நகரில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு இல்லாமல் இல்லை.

எளிதாக குடியமர்தல் என்ற விடயத்தில் பேசல் நகரம் 42ஆவது இடத்தையே பிடித்துள்ளது. அதாவது, அக்கம்பக்கத்தவர்கள் பொதுவாக நட்பு பாராட்டுவதில்லை என 30 சதவிகித வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், பொழுதுபோக்கு அம்சங்கள் விடயத்திலும் பேசல் 48ஆவது இடத்தையே பிடித்துள்ளது. 20 சதவிகிதம் வெளிநாட்டவர்கள், கலாச்சாரம் மற்றும் இரவு வாழ்க்கை, உணவு வகைகள் ஆகியவை திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்கள்.

உண்மையில் உணவு விடயத்தில் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது பேசல் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News