Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டாம் என்று பைடன் வற்புறுத்தியதாக வெளியான செய்திகளை நிராகரித்தார் பெஞ்சமின் நெதன்யாகு..!

இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டாம் என்று பைடன் வற்புறுத்தியதாக வெளியான செய்திகளை நிராகரித்தார் பெஞ்சமின் நெதன்யாகு..!

வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின் போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டாம் என்று அமெரிக்கா வற்புறுத்தியதாக வெளியான செய்திகளை பிரதமர் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

“அமெரிக்கா எங்களுடைய நடவடிக்கைகளை தடுத்தது என்கின்ற செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் அந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.” என்று நெதன்யாகு கூறினார். “இது உண்மையல்ல. இஸ்ரேல் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. போரில் எங்கள் முடிவுகள் எங்கள் செயல்பாட்டுக் கருத்தாய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை, அதை நான் விரிவாகக் கூறமாட்டேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று, வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஹிஸ்புல்லா மைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த கூடும் என்பதால் லெபனானில் ஹெஸ்பொல்லாவை தாக்க வேண்டாம் என்று பைடன் நெதன்யாகுவை வற்புறுத்தியதாக செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இஸ்ரேலிய சிப்பாய்களின் மரணங்கள் அதிகரித்து வருவதால், போர் “கனமான விலையை” நிர்ணயிக்கிறது என்று நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால் ஹமாஸ் அகற்றப்பட்டு சிறைபிடிக்கப்பட்டவர்கள் திரும்பும் வரை சண்டை தொடரும் என்று மீண்டும் அவர் சுட்டிக்காட்டினார்.

Recent News