Thursday, January 23, 2025
HomeLatest Newsதினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையில்லை என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.அது முற்றிலும் உண்மை. ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பல மடங்கு அதிகமாக உதவி செய்கிறது.

குழந்தைகளுக்கு ஆப்பிளை வேகவைத்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.

ஆப்பிளின் நன்மைகள்

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால் இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால் சருமம் இளமையுடன் வைத்து கொள்ள உதவுகின்றது. மேலும் தினமும் இதை சாப்பிட்டு வந்தால் அந்த ஆன்டிஆக்ஸிடன்ட் செல் அழிவைத் தடுத்து சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.

ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் பழத்தையும், பாதாம் பருப்பயுைம் நன்றாக அரைத்து, சுத்தமான பசுவின் பாலைக் காய்ச்சி அதில் கலந்து சாப்பிட்டால் ஞாபக மறதியைப் போக்கும், மூளை வளர்ச்சி பெறும்.

ஆப்பிளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூளையில் உள்ள டோபமைன் உருவாக்கும் மூளை செல்களை அழித்து உண்டாகும் மற்றும் பார்கின்சன் நோய் ஏற்படுவதை தடுக்கும்.

ஆப்பிளில் உள்ள ஃபைபர் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இது இதயம் சார்ந்த நோய்களில் இருந்து உங்களை காக்க மிகவும் உதவும். நமது ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாஷியம் உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்ல பயனளிக்கும்.

ஆப்பிள் பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஒன்று. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தும் மிகவும் உறுதுணையானதாகும்.

குடல் புற்றுநோய்,மார்பகப் புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான புற்று நோய்கள் நம்மை நெருங்காமல் இருக்க ஆப்பிள் பழம் மிகவும் உதவுகிறது.

தினமும் இரண்டு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ள பெரிதும் உதவும்.

ஆப்பிள் பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ள காரணத்தினால் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது அந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு கண்டிப்பாக வழிவகுக்கும்.

இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிப்பதன் மூலம், இரத்த சோகையைத் தடுப்பதுடன், உறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து, உறுப்புக்களும் நன்கு செயல்படும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க ஆப்பிள் பழம் பெரிதும் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது.

கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க அதிகமாக நீர்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

அதிலும் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழ வகைகளில் ஆப்பிள் முதலிடத்தில் இருக்கிறது. ஆப்பிளில் நீர்ச்சத்து மட்டுமல்லாமல் அதிகமாக மாவுச்சத்தும் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் சரி சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனைபடி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகளாக ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட ஆப்பிள் பழம் உதவுகிறது.

ஆப்பிளில் மாலிக் அமிலம் அதிகமாக நிறைந்துள்ளது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் குடல் பாதையில் இருக்கக்கூடிய நுண்கிருமிகள் அனைத்தும் நீங்கும்.

ஆப்பிளை நன்றாக மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டை பகுதியில் இருக்கக்கூடிய நுண்கிருமிகள் அனைத்தும் முற்றிலும் நீங்கிவிடும்.

நம் உடலிலேயே நல்ல பாக்டீரியாக்கள் வாழும் பகுதி என்றால் அது குடலில் தான். ஆப்பிள் நமது பெருங்குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

ஆப்பிள் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, பாக்டீரியாக்களை சமநிலையில் பராமரித்து, உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

ஆப்பிள் உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும். யார் ஒருவர் நோய்வாய்ப் பட்டுள்ளார்களோ, அவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைத்து, சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் இருப்பர்.

தூங்கும் முன் ஒரு ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க முடியுமாம்.

இரவில் படுக்கும் முன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். ஏனெனில் ஆப்பிளில் பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.

உண்மையில் ஆப்பிளை இரவில் தூங்கும் முன் சாப்பிடுவது நல்ல என்று கூறுவதன் உண்மையான காரணம், இரவில் பசி எடுத்தால், அப்போது பிஸ்கட் அல்லது இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், அதில் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும்.

அதுவே பசியின் போது ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் மேம்படும், கலோரிகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் எதுவும் இருக்காது.

ஆப்பிளை தோல் உடனேயே சாப்பிடுவது தான் மிகச்சிறந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஏமாற்று வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆப்பிள் பழம் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதன்மேலே மெழுகு பூசப்படுகிறது. இந்த மெழுகு நம் உடல் நலத்திற்கு பேராபத்துக்களை விளைவிக்கக்கூடும்.

எனவே நீங்கள் ஆப்பிள் பழத்தை கடைகளில் வாங்கும் போது மிகவும் சிகப்பாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கும் ஆப்பிள்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

ஏனெனில் அவை மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களாகும். உங்கள் விரல் நகங்களை பயன்படுத்தி லேசாக சுரண்டி பார்த்தாலே அவை மெழுகு பூசப்பட்ட அப்பிள்களா அல்லது நல்ல ஆப்பிள்களை என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

Recent News