Thursday, January 23, 2025
HomeLatest Newsஅன்றாட உணவில் கத்தரிக்காயை சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்!

அன்றாட உணவில் கத்தரிக்காயை சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்!

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.  கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது.

கத்தரிக்காய் அதிக நார்ச்சத்து மற்றும் நீர்சத்து கொண்டது. மேலும் ஒரு கப் கத்தரிக்காயில் 35 கலோரிகள் மட்டுமே நிறைந்துள்ளன. இதனால் எடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.

தூக்கமின்மை மற்றும் பிற தூக்கக் கோளாறுகளை குணப்படுத்த கத்தரிக்காயை சாப்பிடலாம் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. சளி, இருமலை குறைக்க கூடிய மருந்தாக இந்த கத்திரிக்காய் உள்ளது. மேலும் உடலில் அதிகமாக சேரும் இரும்பு சத்தினை சமப்படுத்தவும் இது உதவுகிறது.

கீல்வாதம்,பித்தம், தொண்டைக்கட்டு, உடல் பருமன், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, மலசிக்கல், கரகரப்பான குரல், வாத நோய் போன்ற நோய்களை குணப்படுத்தும் மருந்தாக கத்திரிக்காய் உள்ளது. மேலும் பசியின்மையை குணப்படுத்தவும், உடல் வலு குறைவதை தடுக்கிறது.

கத்தரிக்காயில் உள்ள போட்டோ நியூட்ரியண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. பிஞ்சு கத்திரிகாயை சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும். மேலும் மூளை செல்களை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் இது உதவுகிறது. கத்தரிக்காயில் வைட்டமின் பி சத்து உள்ளதால் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

Recent News