நம்மில் பலர் இன்று கழிப்பறையில் அமர்ந்திருப்பதில் கணிசமான நேரத்தை செலவிடுகிறோம், மலம் கழிப்பதற்கு மட்டும் அல்ல.. செல்போன் பார்ப்பது, கேம் விளையாடுவது அல்லது புத்தகங்களைப் படிப்பது என பல வேலைகளை கழிப்பறையில் செய்கிறோம்.
வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விடுபடுவதற்கும், கழிப்பறையில் அமர்ந்து உங்களுக்குத் தோன்றுவதைத் தடையின்றிச் செய்வதற்குமான ஒரே இடமாக இப்போது கழிவறைகள் மாறிவிட்டன.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, யாரும் 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் செலவிடக்கூடாது.
உண்மையில், குறைவான நேரம் தான் சிறந்தது.முதலில், உங்கள் தொலைபேசியுடன் கழிப்பறையில் அதிக நேரம் செலவிடுவது உங்கள் தொலைபேசியை 18 மடங்கு அதிக கிருமிகளுக்கு ஆளாக்குகிறது.
உண்மையில், 6 ல் 1 தொலைபேசியில், அவற்றின் மேற்பரப்பில் மலப் பொருளின் தடயங்களைக் கொண்டிருப்பதை சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.
நீங்கள் கழிப்பறையில் செலவழிக்கும் நேரத்தைக் குறைப்பதற்கு மற்றொரு காரணம், கழிப்பறையில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது மூல நோய் மற்றும் ஆசனவாயைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் நீள வழிவகுக்கும்.
மேலும், குடல் இயக்கம் சரியில்லாமல் இருப்பது கழிப்பறையில் அதிக நேரம் செலவழிப்பதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம்.
இருப்பினும் மலக்குடலில் உள்ள நரம்புகளை அழுத்தும் நேரத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
இதைப் போன்ற ஏராளமான பிரச்சனைகள் நீங்கள் தொடர்ந்து கழிப்பறையில் அதிக நேரத்தை செலவிடுவதால் உண்டாகின்றது.
மேலும் இது நீண்ட கால பிரச்சனையாக மாறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது. எனவே கழிவறையில் மலம் கழிக்கும் நேரத்தை தவிர எந்த நேரத்தையும் வீணாக செலவிடாதீர்கள், மற்றும் முடிந்த அளவு கழிப்பறையில் நேரம் செலவழிப்பதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.