Wednesday, December 25, 2024
HomeLatest Newsஹொங்ஹொங்கில் பல துண்டுகளாக மீட்கப்பட்ட மொடல் அழகி.. மூவர் கைது.!

ஹொங்ஹொங்கில் பல துண்டுகளாக மீட்கப்பட்ட மொடல் அழகி.. மூவர் கைது.!

ஹொங்ஹொங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள வாடகை வீட்டில் மொடல் அழகியின் உடல் துண்டாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பல துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளுடன், இறைச்சி வெட்டும் இயந்திரம், மின்சார ரம்பம் மற்றும் சில ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.

அப்பி சோய் ஒரு சர்வதேச மாடலாக இருந்தார் மற்றும் பாரிஸில் நடந்த எலி சாப் ஸ்பிரிங் சம்மர் 2023 ஹாட் கோச்சர் ஷோவில் பங்கேற்று, புகைப்படம் எடுக்கப்பட்டதில் மேலும் பிரபலமானார்.இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில், அவரது வாடகை வீட்டில் கண்டெடுக்கப்பட்டார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், அபியின் முன்னாள் கணவர் உட்பட 3 பேரை பொலிஸார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.அப்பி சோயின் முன்னாள் கணவர் ஹொங்ஹொங்கில் உள்ள கப்பலில் வைத்து தப்பி செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பி சோயின் தலை, உடற்பகுதி அல்லது கைகளை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Recent News