Thursday, January 23, 2025
HomeLatest Newsகிறிஸ்துமஸ் தினத்தன்று கவனமாக இருங்கள்! எச்சரிக்கும் டைம் ட்ராவலர்

கிறிஸ்துமஸ் தினத்தன்று கவனமாக இருங்கள்! எச்சரிக்கும் டைம் ட்ராவலர்

டைம் ட்ராவலர் ஒருவர், இந்த மாதத்தின், அதாவது டிசம்பர் மாதத்தின் நான்கு நாட்கள் கவனமாக இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளார்.

தன்னை டைம் ட்ராவலர் என அழைக்கும் Eno Alaric என்னும் அந்த நபர், தான், 2671ஆம் ஆண்டிலிருந்து வந்தவர் என கூறுகிறார்.

பூமியைப் போலவே மற்றொரு கோள் இருப்பதாகவும், பூமிக்கு ஏலியன்கள் வருவார்கள் என்றும் முன்பு கூறியிருந்தார் அவர்.

டிசம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் முக்கியம் என்று கூறியுள்ள Eno Alaric, அந்த நாட்களில் முக்கிய நிகழ்வுகள் சில நடக்கும், அவை நான் ஒரு டைம் ட்ராவலர் என்பதை நிரூபிக்கும் என்று கூறியுள்ளார்.

அந்த நாட்கள் டிசம்பர் 8, 12, 20 மற்றும் 25 ஆகிய நாட்கள் ஆகும்.குறிப்பாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று மிக முக்கிய நிகழ்வொன்று நடக்க இருப்பதாக எச்சரித்துள்ள Eno Alaric, அன்று பாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், டிசம்பர் 8 மற்றும் 12 ஆகிய திகதிகளில் அப்படி ஒன்றும் நடக்காததால், 20 மற்றும் 25ஆம் திகதிகளில் ஏதாவது நடக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்கள் நெட்டிசன்கள்.

Recent News