ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க இரண்டு முக்கிய தேவைகளை நிறைவேற்றியுள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்
மேலும், நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் சுதந்திரத்துடன் அரசியலில் ஈடுபடுவதற்கான அமைதியான சூழலை ரணில் விக்கிரமசிங்க உருவாக்கினார்.
போராட்டம் காரணமாக ஏற்பட்ட நிலையை ரணில் விக்ரமசிங்க மாற்றியமைத்தார் என்று அவர் கூறினார்.
எரிவாயு வெடிப்பு, எரிவாயு வரிசை, எரிபொருள் வரிசைகள் மற்றும் 10 மணிநேர மின்வெட்டு போன்ற முக்கிய பிரச்சினைகளை ரணில் விக்ரமசிங்கவால் தீர்க்க முடிந்தது.
“தற்போது, அந்த சமூகப் பிரச்சனைகள் எதையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை. அவர் அத்தகைய பிரச்சினைகளை தீர்க்கும் திறன் கொண்ட ஒரு தனி நபர் என்று நாங்கள் நம்பினோம், அவர் அதை நிரூபித்துள்ளார், ”என்று அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதிக்கான தெரிவு சரியானது என்பதையே இது காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.