Saturday, November 23, 2024
HomeLatest Newsதுளசி நல்லது, ஆனால் அதிகமாக சாப்பிட்டால் இந்த ஆபத்தை உண்டாக்கும்!

துளசி நல்லது, ஆனால் அதிகமாக சாப்பிட்டால் இந்த ஆபத்தை உண்டாக்கும்!

துளசி மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் சிறுவயதிலிருந்தே படித்திருக்கிறோம். மருத்துவத்தில், இது அமிர்தம் போன்ற மருந்தாக கருதப்படுகிறது. துளசியின் பலன்களை நீங்கள் உங்கள் பாட்டியிடமிருந்து கேட்டிருப்பீர்கள். பொதுவாக துளசி மூலிகைகளின் அரசி என்பார்கள். இன்றூம் கிராமங்களில் சளி, காய்ச்சல், இருமலுக்கு துளசி பெரிதும் உதவக்கூடும். ஆயுர்வேதத்தில் முக்கியமான மூலிகை துளசி தான். அதே நேரம் துளசியை அதிகமாக பயன்படுத்தும் போது சில பக்கவிளைவுகளும் உண்டாக கூடும். அது குறித்தும் அறிந்து கொள்வோம்.

அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது

துளசியை சாப்பிடுவதால் சில தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. உண்மையில், ஆயுர்வேதாச்சார்யா மருத்துவர்களின் கூற்றுப்படி, துளசி இலைகளில் கருவுறாமை பண்புகள் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் துளசியை அதிகம் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை குறையலாம்.

பல் சொத்தை ஏற்படும் அபாயம்

துளசி இலையில் பாதரசம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. அதே சமயம் இதில் ஆர்சனிக் கலந்துள்ளது. அதிகமாக மென்று சாப்பிட்டால் பற்கள் சேதமடையலாம். எனவே, மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையின்றி துளசியை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

இரத்தத்தை மெலிதாக்கும்

துளசி இரத்தக் கட்டிகளைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. துளசியை அதிகமாக உட்கொள்வதால் இரத்தம் மெலியும் அபாயமும் உள்ளது.

கர்ப்ப காலத்தில் சாப்பிடக் கூடாது

கர்ப்ப காலத்தில் துளசி சாப்பிடலாமா வேண்டாமா என்பது குறித்து பல ஆய்வு அறிக்கைகளில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. துளசியில் கருவுறாமைக்கு எதிரான பண்புகள் காணப்படுகின்றன, எனவே அதை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. 

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு

துளசியை சர்க்கரைநோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க எடுக்கிறார்கள். ஆனால் நீரிழிவு கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் இரத்த சர்க்கரை குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் , நீரிழிவு கட்டுக்குள் இருக்க சற்று அதிகமான பவர்கொண்ட மாத்திரைகள் எடுப்பவர்கள் துளசியை எடுத்துகொண்டால் அது ஆபத்தான பக்கவிளைவுகளை உண்டாக்கும். 

மருந்துகளில் துளசியின் தலையீடு

பொதுவாக அலோபதி நோய்க்காக மருந்துகள் எடுக்கும் போது அது உடல் ஆரோக்கியத்தில் தலையிடக்கூடும். மருந்துகளோடு துளசி எடுக்கும் போது இரத்தத்தில் உள்ள மருந்துகளின் அளவு அதிகரிக்க செய்யலாம். அல்லது குறையலாம்.

Recent News