Thursday, May 2, 2024
HomeLatest Newsமோசமான கட்டத்தை எட்டியுள்ள வங்கிகள்! – பேராசிரியர் அதிர்ச்சித் தகவல்

மோசமான கட்டத்தை எட்டியுள்ள வங்கிகள்! – பேராசிரியர் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அரச வங்கிகள் தற்பொழுது மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

முற்று முழுதாக நாட்டின் வெளிநாட்டு துறை செயலிழந்துள்ளதுடன், ஒரு அரச வங்கி பாதிக்கப்படும் போது அனைத்து அரச வங்கிகளும் நெருக்கடியை எதிர்நோக்குவதுடன், இவை தனியார் வங்கிகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி நாடு ஸ்தம்பிதம் அடையும் நிலைக்கு செல்லும்.

இதுவரை காலமும் வெளிநாட்டு துறைகளில் காணப்பட்ட பிரச்சினை தற்பொழுது படிப்படியாக உள்நாட்டினை நோக்கி நகர்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் சில அரச நிறுவனங்கள் மிக மோசமான நட்டத்தை எதிர்கொண்டுள்ளன.

இந்த நட்டம் அனைத்தையும் சுமப்பது இலங்கையில் உள்ள ஒரு அரச வங்கியாகும். அத்துடன், கோவிட் தொற்று காலப்பகுதியில் வட்டி விகிதங்களை குறைக்குமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை ஏற்று உடனடியாக அரச வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்தன.

எனினும், தனியார் வங்கிகள் உடனடியாக வட்டி விகிதங்களை குறைக்கவில்லை. இதன்படி, நான்கு விகிதத்திற்கு அரச வங்கியால் கடன் வழங்கப்பட்டன. மேலும் அரச வங்கிகளில் மேற்கொள்ளப்படும் வைப்புகளுக்கு 22 விகிதம் வட்டி வழங்கப்பட வேண்டியிருந்தது.

இதன்படி, அரச வங்கிகளுக்கு நான்கு விகித வட்டி வரும் நிலையில், கொடுக்க வேண்டியது 22 விகித வட்டியாக இருந்துள்ளது. இந்த இடைவெளியானது மறைப் பெறுமானத்தில் காட்டுகின்றது. இது பெரிய அழுத்தங்களை தருகின்றன. உண்மையில் அரச வங்கிகள் மிக மோசமான அழுத்தத்தில் இருக்கின்றன. – என்றார்.

Recent News