பங்களாதேஷில் கடந்த 2018-2019 ஆண்டு காலப் பகுதி தொடக்கம் அகதிகளாகவும், முகாம்களிலும் வாழ்ந்து வரும் ரோஹினியா இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்களின் நிரந்த குடியுரிமை மற்றும் விதிவிட பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளது.
ரோஹினியா சமூகம் சிறுபான்மை சமூகமாக இருப்பதுடன், அன்றாட தின வருமானத்தில் வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ரோஹினியா இன மக்களில் தற்போது 60 வீதமானவர்கள் இளைஞர்களாக இருப்பதனால் பங்களாதேஷின் எதிர்கால சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு இவர்களை பயன்படுத்த முடியும் என சர்வதேச தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சகம் சர்வதேச அமைப்புக்களிடமும், உலக வங்கியிடமும், ஐக்கிய நாடுகள் சபையிடமும் கடிதங்களை அனுப்பியுள்ளதாக பங்களாதேஷ் செய்திகள் தெரிவிக்கின்றன.