Friday, November 15, 2024
HomeLatest NewsTik Tok பயன்படுத்த தடை- பயனர்கள் அதிர்ச்சி!

Tik Tok பயன்படுத்த தடை- பயனர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் லூசியானா மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள அரச நிறுவனங்களில் TikTok பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க அரசு ஊழியர்கள் சீனாவுக்கு சொந்தமான வீடியோ செயலியான Tik Tok ஐ அரசுக்குச் சொந்தமான கருவிகளில் பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் கடந்த புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் அரசுக்குச் சொந்தமான கருவிகளில் டிக்டொக்கை பயன்படுத்தக் கூடாது என சட்டமூலத்தை நிறைவேற்றி உள்ளது.

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. குடியரசு கட்சியை சேர்ந்த மாண்டோ மற்றும் பிரதிநிதிகள் அவையின் குடியரசு கட்சியின் மைக், ஜனநாயக கட்சியின் ராதாகிருஷ்ணன் மூர்த்தி ஆகியோர் tiktok செயலியை தடை செய்ய வேண்டும் என மசோதா கொண்டு வந்தனர்

வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் மாநிலத் துறைகள் உட்பட பல கூட்டாட்சி நிறுவனங்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்குச் சொந்தமான சாதனங்களில் இருந்து TikTok ஐ தடை செய்துள்ளன.

டிக்டாக் மூலம் அமெரிக்கர்களை சீன அரசு உளவு பார்க்கக் கூடிய வாய்ப்பிருப்பதால், அந்த செயலியால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக எப்பிஐ இயக்குநர் கிறிஸ் ரே தெரிவித்துள்ளார்.

அண்மையில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐயின் இயக்குநர் கிறிஸ் ரே, ‘‘டிக்டாக் செயலி முழுக்க முழுக்க சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனமாகும். அதன் செயல்பாட்டை சீன அரசு கட்டுப்படுத்துகிறது. எனவே, டிக்டாக்கின் உள்ளடக்கங்களை கையாளவும், சீன அரசு விரும்பினால் அதன் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தவும் முடியும். மேலும், அமெரிக்கர்களின் தகவல்களை பெறும் டிக்டாக் அவற்றை சீன அரசுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புண்டு. இத்தகவல் மூலம் அமெரிக்கர்களை சீன அரசால் உளவு பார்க்க முடியும். எனவே இது மிகப்பெரிய தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கவலை அளிக்கிறது எனவே அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன ’’ என அவர் தெரிவித்திருந்தார்

Recent News