Thursday, January 23, 2025
HomeLatest Newsபல்கலைக்கழக விண்ணப்பத்தில் இனத்தை பயன்படுத்தத் தடை..!உச்ச நீதிமன்றம் அதிரடி..!

பல்கலைக்கழக விண்ணப்பத்தில் இனத்தை பயன்படுத்தத் தடை..!உச்ச நீதிமன்றம் அதிரடி..!

பல்லைக்கழக சேர்க்கை விண்ணப்பத்தில் மாணவர்கள் தமது இனத்தை குறிப்பிட தேவையில்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க நாட்டில் பல்லைக்கழக மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் குறித்த மாணவர்களின் இனத்தை குறிப்பிடும் நடைமுறை காணப்படுகின்றது.

அந்த முறையானது 1960 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வரும் சுழலில் தற்பொழுது அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதை விடுத்து மாணவர்கள் அவர்களுடைய அனுபவங்கள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்களை இனத்தின் அடிப்படையில் நடத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 நீதிபகள் தடைக்கு ஆதரவு அளித்துள்ளதுடன் 3 நீதிபதிகள் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News