கிழக்காசியாவின் கொரியத் தீபகற்பததின் வடபகுதியிலுள்ள வடகொரியா நாட்டில் அதிபர் கிங் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெறறு வருகின்றது.
நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்துவரும் நிலையில் தென்கொரியா , ஜப்பான் ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் முகமாக அடிக்கடி ஏவுகணை பரிசோதனை நடாத்துவதால் அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இந் நிலையில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு நாட்டி் தற்காலை வசய்வோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்ததால் நாட்டில் தற்கொலை மேற்கொள்வதானது கம்யூனிசத்திற்கு எதிரானது என கருத்து வெளியிட்டுள்ளார்.
இனி வருங் காலங்களில்எந்தவொரு நபரும் தற்கொலை மேற்கொள்ள்கூடாது எனப் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். இதேவேளை சென்ற ஆண்டு கொரியன் சீரிஸ் மற்றும் அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்த 2 உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மணர தண்டணை விதிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.