Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsதன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை: மீறினால் 15 ஆண்டு சிறை

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை: மீறினால் 15 ஆண்டு சிறை

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ஈராக் அரசாங்கம் சார்பில் புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புதிய சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிரானதென சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளதுடன் அந்நாட்டில் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சட்டம் ஈராக் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளதுடன் தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் இந்த புதிய சட்டத்தை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென ஈராக் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News