திருமண வீடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கும், இசை ஒலிபரப்பு செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளமை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு கடுமையான அடக்கு முறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பெண் குழந்தைகள் பள்ளிகள் மற்றும் கல்லூரி செல்வது, அலுவலகங்களுக்கு செல்வதற்கும் தடை செய்யப்பட்டு முழுவதுமாக அவர்களின் சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, கேளிக்கைகளில் ஈடுபடுவது மதத்திற்கு எதிரான குற்றமென பிரகடனம் செய்யப்பட்டு சினிமா, தொலைக்காட்சி, பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளது.
நல்லொழுக்கத்தை பரப்புதல் மற்றும் தீமைகளை தடுத்தல் என்ற நோக்கத்திற்காக ஒரு அமைச்சரவை அங்கு செயற்பட்டு வரும் நிலையில் தற்பொழுது அது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் திருமண வீடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கோ, இசை ஒலிபரப்பு செய்வதற்கோ அல்லது பாடல்கள் பாடுவதற்கோ தடை செய்யப்பட்டுள்ளது.
இசை என்பது மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் மனிதர்கள் மட்டுமே பாடல்களை பாட வேண்டும் என்றும் அவை கடவுளை புகழ்வதாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து ஒரு மண்டபத்தின் மேலாளர், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், இசை, நடனம் போன்றவை இல்லை எனில் திருமண வீட்டிற்கும், துக்க நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? என்று தெரிவித்துள்ளார்.