Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅழகு நிலையங்களிற்குத் தடை..!வீட்டிற்குள் முடங்கிய பெண்கள்..!முக்கிய நாட்டில் அதிரடி..!

அழகு நிலையங்களிற்குத் தடை..!வீட்டிற்குள் முடங்கிய பெண்கள்..!முக்கிய நாட்டில் அதிரடி..!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல், பெண்களுக்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிற்கு செல்லவும், என்.ஜி.ஓ.வில் பணிபுரிவதற்கும், பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் வேலை செய்வதற்கும் பெண்களிற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்பொழுது காபூல் மற்றும் நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களிலும் உள்ள பெண்களின் அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் இந்த புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த மேக்கப் கலைஞர் ஒருவர், ஆண்கள் வேலையின்றி தவித்து வருவதால் வீட்டு சுமையை ஏற்று பெண்கள், அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகின்றது. தற்பொழுது, அழகு நிலையங்களிற்கும் தடைவிதித்தால், எம்மால் என்ன செய்ய முடியும்? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், ஆண்களுக்கு வேலை இருந்தால் நாம் வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம். இனி பட்டினி கிடந்து சாக வேண்டியது தான். நாங்கள் சாக வேண்டும் என விரும்புகிறீர்களா? என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதையடுத்து, காபூலில் வசித்து வரும் நபர் ஒருவர் தலிபான் அரசாங்கம் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் அது இஸ்லாம் மற்றும் நாடு போன்றவற்றை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக, ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளானவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News