Wednesday, December 25, 2024
HomeLatest Newsபுதிய வகை மோட்டார் பைக்கை களமிறக்கும் பஜாஜ்!

புதிய வகை மோட்டார் பைக்கை களமிறக்கும் பஜாஜ்!

விரைவில் அதிக மைலேஜ் கொடுக்கும் புதிய பைக்கை குறைவான விலையில் பஜாஜ் அறிமுகப்படுத்த இருக்கிறது.

நீங்கள் புதிய பைக் ஒன்று வாங்க திட்டமிட்டிருந்தால், சில நாட்கள் காத்திருக்கலாம். பஜாஜ் நிறுவனம் புதிய பைக் ஒன்றை கொண்டு வரவுள்ளது. அதுவும் குறைவான விலையில், அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்காக இருக்கும் என பஜாஜ் தெரிவித்துள்ளது.

அந்த பைக் மாடல் 125 சிசி பஜாஜ் CT125X. டீலருக்கு பைக் வர ஆரம்பித்துவிட்டது. விரைவில் விற்பனைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். பைக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிடி 100 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும்.

சிடி 100 பைக்கின் அடுத்த வெர்சனாக பார்க்கப்படும் பஜாஜ் CT125X பைக்கில் சிங்கிள் சீட்டர் இடம்பெற்றுள்ளது. USB சார்ஜர் வசதியும் பைக்கில் கொடுப்பட்டிருப்பது வரவேற்புக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆட்டோ டிராவல் டெக் என்ற யூடியூப் சேனல் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் பைக்கின் வடிவமைப்பு மற்றும் எஞ்சின் அமைப்பு தற்போதைய CT110X போலவே உள்ளது.

கருப்பு மற்றும் சிவப்பு நிற ஷேடோ தவிர, புதிய டூயல்-டோன் பளபளப்பான கருப்பு மற்றும் பச்சை நிற ஷேடோவும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய CT110X உடன் ஒப்பிடும்போது வரவிருக்கும் CT125X ஆனது பாடி பேனலில் புதிய கிராபிக்ஸ்களைப் பெறுகிறது. இருப்பினும், மிகப்பெரிய மாற்றமாக, புதிய அம்சமாக பார்க்கப்படுவது என்னவென்றால், இருக்கை வடிவமைப்பு மற்றும் ஹேண்டில்பார் கிளாம்ப்களில் பொருத்தப்பட்ட USB சார்ஜர் ஆகும். என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News