Wednesday, December 25, 2024
HomeLatest Newsபயணப்பை கொள்ளையர்கள்; மக்களே அவதானம்! பொலிஸார் அறிவுறுத்தல்

பயணப்பை கொள்ளையர்கள்; மக்களே அவதானம்! பொலிஸார் அறிவுறுத்தல்

எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பயணப் பை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தனியார் பேருந்து சேவைகள், அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அவற்றில் மக்களின் நெரிசலும் அதிகரித்துள்ளது.

இதன்போது மக்களின் பயணப் பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிடுவதற்காக சிலர் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கின்றனர்.

எனவே, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Recent News