Thursday, January 23, 2025
HomeLatest Newsமோசமான பொருளாதார நெருக்கடி..!போர் விமானங்களை விற்பனை செய்யும் பாகிஸ்தான்..!

மோசமான பொருளாதார நெருக்கடி..!போர் விமானங்களை விற்பனை செய்யும் பாகிஸ்தான்..!

பாகிஸ்தான், தற்பொழுது மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் போர் விமானங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், அந்நாட்டுத் தயாரிப்பான ஜேஎஃப்-17 தண்டர் பிளாக் III ரகத்தைச் சேர்ந்த 12 போர் விமானங்களை ஈராக்கிற்கு விற்பதற்கு தீர்மானித்துள்ளது.

ரஷ்ய தயாரிப்பான ஏரோ என்ஜின் பொருத்தப்பட்ட, 42 சதவீத விமான பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 58 சதவீத உற்பத்தி பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், சுமார் 1.1 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆயுத விற்பனையாக அமையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎஃப் 17 ரக விமானங்களை வாங்கும் 5 ஆவது நாடு ஈராக் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும் இதுவரை அந்நாட்டின் வரலாற்றில் போர் விமானங்களை விற்பனை செய்ததில்லை என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News