Thursday, December 26, 2024
HomeLatest Newsமுதுகில் குத்தும் ரணில் – மக்களை ஒன்றிணையுமாறு சுமந்திரன் எம்.பி அழைப்பு!

முதுகில் குத்தும் ரணில் – மக்களை ஒன்றிணையுமாறு சுமந்திரன் எம்.பி அழைப்பு!

நாட்டை மீட்பதற்கு போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை மக்கள் காப்பாற்ற முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

நாட்டில் அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து செல்கிறது.அமைதியாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தால் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.நாட்டை சூறையாடிய ராஜபக்சாக்களை விரட்டி அடிப்பதற்கான மக்கள் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளனர்.போராட்டத்துக்கு மக்கள் ஆதரவும் கிடைத்தது.

ஆனால் இன்று அதே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றனர்.அவர்களை காப்பாற்ற வருவதற்கு பலர் பயப்பிடுகின்றனர்.நாடாளுமன்றில் நேற்றும் கூட இது பற்றி பலர் கதைத்துள்ளனர்.

முதல் அங்கே நடைபெற்றது மக்கள் போராட்டம் பின்னர் அது வேறு நபர்களால் கைப்பற்றப்பட்டது என்றவாறான கருத்துக்களை கூறியுள்ளனர்.

போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கியவர்கள் இன்று தேடித் தேடி கைது செய்யப்படுகின்றனர்.ஆனால் நாட்டை நாசமாக்குபவர்கள் இன்றும் சுற்றித் திரிகின்றனர்.அவர்களை கைது செய்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்று ஆட்சியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது.ஆர்ப்பாட்டத்தால் தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தவர்கள்.யார் யார் முதுகில் ஏறி பதவிக்கு வந்தார்களோ அவர்களே இன்று வேட்டையாடப்படுகின்றனர்.

இந்த கைதுகள் கண்டிக்கப்படவேண்டியது.ஆகவே மக்களிடம் நான் ஒன்றைக் கேட்டுக்கொள்கின்றேன்.நாட்டை கொள்ளையடித்தவர்களை விரட்டி அடித்த,இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை காப்பாற்ற மக்கள் முன்வர வேண்டும் என்றார்.

Recent News