Thursday, May 15, 2025
HomeLatest NewsWorld Newsபெத்லகேமில் இன்குபேட்டரில் குழந்தை இயேசு..!

பெத்லகேமில் இன்குபேட்டரில் குழந்தை இயேசு..!

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து காசா மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்த போரில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. வான் வழியாகவும், தரை வழியாகவும் நடத்தப்படும் தாக்குதலால் காசாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காசா மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், போரை நிறுத்த வலியுறுத்தியும் பாலஸ்தீனம் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தவிர்த்தனர். இதில் பெத்லகேமில் பிஷாரா எனும் பெண் ஒருவர், குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துமஸ் நாளில் தேவாலயத்தின் முன்பு இன்குபேட்டரில் குழந்தை இயேசு சிலையை வைத்து கவனம் ஈர்த்தார்.

Recent News