Thursday, January 23, 2025
HomeLatest Newsஅமெரிக்காவில் 130 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை!

அமெரிக்காவில் 130 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை!

அமெரிக்காவில் 130 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் பெண் குழந்தை ஒன்று தமது பரம்பரையில் பிறந்துள்ளதாக தமபதிகள் பெரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

கடந்த, 1885ம் ஆண்டுக்குப் பின் ஆண் குழந்தைகளே அவர்களது பரம்பரையில் பிறந்து வந்த நிலையில் 130 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ கிளார்க். இவரது மனைவி கரோலின் கிளார்க்.

சமீபத்தில் இந்த தம்பதிக்கு, இரண்டாவது குழந்தையாக, பெண் குழந்தை பிறந்தது. கடந்த, 1885ம் ஆண்டுக்குப் பின், ஆண்ட்ரூ கிளார்க் குடும்பத்திற்கு, தலைமுறை தலைமுறையாக பெண் குழந்தை பிறக்கவில்லை ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்தன.

தற்போது, 130 ஆண்டுகளுக்குப் பின், குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதால், ஆண்ட்ரூ கிளார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கரோலின் கிளார்க் கூறுகையில்,

எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கவில்லை என, என் கணவர் ஆண்ட்ரூ கிளார்க் கூறியதை முதலில் நான் நம்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோரிடம் கேட்ட போது தான் உண்மை தெரிய வந்தது.

கர்ப்பமாக இருந்த போது, பெண் குழந்தை பிறக்குமா, ஆண் குழந்தை பிறக்குமா என்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என மட்டுமே முடிவு செய்தோம்.

ஆனால், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால், நிலவில் உள்ளது போல் உணர்கிறோம் என அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  

Recent News