Sunday, January 19, 2025
HomeLatest Newsகடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை!

கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை!

கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொவருர் குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு காரியாலயத்துக்கு முன்பாக வரிசையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக, குறித்த பெண் வரிசையில் காத்திருந்துள்ளார்.

அதன்போது, பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை – காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்ததாக தெரியவந்துள்ளது.

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recent News