Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஉலகினில் மிகவும் அழகான தேசிய கொடிகள் - முதல் 05 ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகள்...

உலகினில் மிகவும் அழகான தேசிய கொடிகள் – முதல் 05 ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகள் என்ன என்ன ?

உலகினில் காணப்படும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான தேசிய கொடியினை கொண்டுள்ளது . ஒவ்வொரு நாட்டிற்கும் அதனுடைய தேசிய கோடி மிகவும் சிறப்பு மிக்கதே .ஒலிம்பிக்ஸ் போட்டியாக இருப்பினும் அரச சந்திப்புகளாக இருப்பினும் ஒவ்வொரு நாட்டினையும் பிரதிபலிப்பது அந்தந்த நாட்டின் தேசிய கொடிதான் . தேசிய கீதம் மற்றும் தேசிய இலட்சினைகளை விட தமது நாட்டினை பிரதிபலிக்கும் சின்னமாக மக்கள் தேசிய கொடியினையே அதிகம் விரும்புகின்றனர் .அந்தவகையில் உலகினில் மிகவும் அழகான , பார்ப்பவர்களை கவரக்கூடிய முதல் 5 தேசிய கொடியினை கொண்ட நாடுகளின் பட்டியலை MSN இணைய தளம் தெரிவித்துள்ளது .

05 ம் இடத்தில் நேபால் நாட்டின் கொடி தான் உள்ளது . இந்த நாட்டின் தேசிய கொடி அதன் அமைப்பிற்கே பெயர்போனது . இரண்டு முக்கோணங்களை அடுக்கிவைத்தாற்போல் இந்த நாட்டின் தேசிய கொடி காணப்படுகிறது .04ம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் கொடிதான் உள்ளது . கறுப்பு , மஞ்சள்.வெள்ளை, பச்சை, சிவப்பு மற்றும் நீலம் என 06 கீலங்களை கொண்டதாக இந்த நாட்டின் தேசியக்கொடியுள்ளது .03 ம் இடத்தில் பிரேசில் நாட்டின் கொடியுள்ளது . பச்சை பின்னணியில் நீல வடத்தில் 27 நட்ச்சத்திரங்களுடன் இந்த கொடி அழகு மிக்கதாக திகழ்கிறது .02 ம் இடத்தில் இருப்பது கனடா நாட்டின் கொடிதான் . சிவப்பு வெள்ளை பின்னணியில் மேப்பில் இலையுடன் இந்த கொடி இருகின்றது . மேலும் 01ம் இடத்தில் ஜப்பான் நாட்டின் கொடி காணப்படுகின்றது . பார்ப்பதற்கு அவ்வளவு பெரிதாக வடிவமைப்பு இல்லாவிட்டாலும் மிகவும் எளிமையான வடிவமைப்பு கொண்ட கொடிகளில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது .

Recent News