ரஷ்யாவிற்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதனை ஒத்திவைக்குமாறு வெளிநாடுகள் சில வெளியுறவு அமைச்சிற்கு ஆலோசனை விடுத்துள்ளன.
தென் ரஷ்யாவின் நிலையற்ற பாதுகாப்புச் சூழல், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலங்களில் ரஷ்யாவின் சில இடங்களில் குண்டுவீச்சு, ஆளில்லா வானூர்தித் தாக்குதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டவர்கள், மாநிலங்களிடையே பயணம் செய்வதைத் தற்போதைக்குத் தவிர்க்குமாறு அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
ரஷ்ய – உக்ரேன் பூசல் தொடர்வதால் உக்ரேனுக்குப் பயணம் செய்வதையும் தவிர்க்குமாறும் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், விழிப்புடன் செயற்பட்டு உள்ளூர்ச் செய்திகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.