Friday, January 24, 2025
HomeLatest Newsஉலகெங்கும் 52,000 திரைகளில் வௌியாகும் அவதார் 2

உலகெங்கும் 52,000 திரைகளில் வௌியாகும் அவதார் 2

ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் அவதார்.

25 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டொலர்கள் வசூலைப் பெற்றது.

சுமார் 12 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் நாளை (16) வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தைப்போல மிக சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent News