இலங்கையின் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் முதற் தடவையாக பாரிய நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் தனது நிதியுதவியில் மேலும் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை இணைத்துள்ளதாகவும் மொத்தமாக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொல்ர்கள் பெறுமதியிலான மனிதாபிமான அத்தியவசிய தேவைகளை வழங்கி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிதியுதவி மூலம் இலங்கையில் தற்போது நிலவிவரும் அத்தியவசிய குறைபாடுகளை உடனடியாக தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.