ஆஸ்திரேலியா தனது புலம்பெயர்வு திட்டத்தை சரி செய்யவில்லை என்றால் திறன்வாய்ந்த குடியேறிகளை கனடா போன்ற பிற நாடுகளிடம் இழக்க நேரிடும் ஆபத்து உள்ளதாக ஆஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் எச்சரித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான குடியேறிகளை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் இக்கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில்,முன்னாள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்ட சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான முயற்சியை தற்போதைய ஆஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறிகளை அனுமதிக்கும் எண்ணிக்கை 160,000 ஆக தற்போதுள்ள நிலையில், அதனை 160,000 யிலிருந்து 180,000 வரையிலான எண்ணிக்கையாக உயர்த்த ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் சன் ஹெரால்ட் மற்றும் சண்டே ஏஜ் ஊடகங்கம் வெளிப்படுத்தியுள்ளன.
அதே போல், ஆஸ்திரேலியாவின் அகதிகள் உட்கொள்ளல் எண்ணிக்கையை 13,750 யிலிருந்து 27,000 த்துக்கு உயர்த்துவதற்கான கொள்கையை லேபர் அரசாங்கம் கொண்டிருப்பதாக அமைச்சர் கில்ஸ் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் அகதிகள் திட்டம் பாரபட்சமற்றதாக இல்லாமல் இருப்பதற்கான ஆதரவை ஆஸ்திரேலியா வழங்குவது முக்கியமானதாகும். மீள்குடியேற்றத்துக்கான தேவையில் உள்ள மக்களை குடியமர்த்துவதை உறுதிச்செய்ய ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் அறிவுரையின் அடிப்படையில் நாம் செயற்படுகின்றோம்,” என ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.